
முத்துக்குமார் ,,
நண்பனே !!! ஏன் உன்னால் மற்றவர்களை போல் இந்த கொடுமைகளை சகித்துகொள்ள முடியாயவில்லை . ??
உனக்கு தெரியாத நம்மை பற்றி நினைக்க இங்கே ஒரு ஜீவனும் இல்லை என்று ?? ...
உனக்கு தெரியாத நீயும் புரட்ட படாத வரலாற்று பக்கங்களில் ஒன்றாவை என்று ??
உனக்கு தெரியாத இங்கே பொதுநலம் என்பது இரண்டாம் பட்சம் தான் என்று ??
நண்பனே உனது கடிதத்தின் தாக்கம் எனது நினைவு இருக்கும் வரை என்னுள் இருக்கும். உனது உயிர் தியாகத்துக்கு நாங்கள் அருகதை உள்ளவர்களா என்னும் கேள்வி என் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது . விடை காண்பேன் என்னும் நம்பிக்கை எனக்கு இல்லை .
நாம் இன்னும் என்ன செய்ய வேண்டும் , இது ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சனை மட்டும் இல்லை , இரு நாட்டு மக்களின் உணர்வு சம்மந்தபட்ட பிரச்சனை என்றுஉலகம் உணர ??
இப்படிக்கு ,
கண்ணீரை மட்டுமே சிந்த இயலும் ஒரு கோழை

No comments:
Post a Comment