February 22, 2009

யாரடி நீ

யாரடி நீ ...
முகம் காட்ட மறுக்கிறாய் ...
மனதில் மதி நிலவாய் மலர்கிறாய் ...

யாரடி நீ ...
எனது நினைவுகளில் நிறைகிறாய்
...
இருந்தும் மனதில் குறை என வதைக்கிறாய் ...

யாரடி நீ ...
இதயத்தை துடிக்கவும் வைக்கிறாய் ...
துடிப்பை நிறுத்தவும் செய்கிறாய் ...

யாரடி நீ ..
மனதுக்கு சிறகுகளை கொடுக்கிறாய் ..
உன் நினைவால் மனதை சிறையும் வைக்கிறாய் ...

யாரடி நீ ...
என்னுள் உன்னை காண்கிறேன் ,,
உன்னால் என்னுள் என்னை தேடுகிறேன் ...

மனம் இருந்தால் உன் முகம் காட்டு ...
பரிசாக உலகத்தை வென்று காட்டுகிறேன் .

February 12, 2009

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !


எனது மனம் கவர்ந்த பாரதியார் கவிதைகளில் ஒன்று !!!

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !
செல்வ களஞ்சியமே !
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே !

ஓடி வருகையிலே - கண்ணம்மா !
உள்ளங் குளிரு தடீ !
அடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ !

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ !
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலர்க்குதடீ !

கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ !

உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?

சொல்லும் மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் திர்த்திடு வாய்
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய் ,

இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ?

- பாரதியார்

February 7, 2009

உங்களுக்கு தெரியமா ??

இந்த செய்தி உங்களில் பல பேருக்கு தெரிந்து இருக்கலாம் , ஆனாலும் இன்னைக்கு சொல்ல ஒன்னும் இல்லாதது நாலும் , இந்த செய்தியின் முக்கியதுவத்தினாலும் , இதை பதியிறேன் ...

நம்ப தமிழ்நாடு அரசாங்கம் , ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்கு . அது என்ன என்றால் முதலாம் வகுப்பு முதல் பணிரெண்டம் வகுப்பு வரை அனைத்து பாட புத்தகங்களை PDF
தொகுப்புகளாக வெளியிட்டு உள்ளனர் .

வலை முகவரி : http://www.textbooksonline.tn.nic.in/ .

நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் பரிச்சை நேரத்தில் , புத்தகத்தை தொலைத்து விட்டால் இனி கவலை பட வேண்டாம் ;) ( நான் நிறைய முறை தொலைத்து , வீட்டில் உதை வாங்கி இருக்கேன் ) .

மேலும் வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்கள் , தமது குழந்தைகளுக்கு தமிழ் கற்று தர எண்ணினால் , இந்த புத்தகங்களை பயன் படுத்தி கொள்ளலாம். இல்லை என்றால் பொழுது போகாத நேரங்களில் நமது அறிவை இந்த புத்தகங்கள் மூலம் சோதித்து கொள்ளலாம்.


பித்தன்

February 4, 2009

இரயலில் பயண விரும்பிகளுக்கு...

இரயலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு , இந்த பக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் ..

வலை முகவரி : http://www.cleartrip.com/trains/calendar .

மிக எளிமையாக 15 நாட்கள் வரை , முன்பதிவுகளின் நிலவரத்தை காண முடிகிறது .
ஒரு முறை முயன்று தான் பாருங்களேன் :) ....

பித்தன்

February 3, 2009

கூகிள் - தமிழ்நாட்டில் இன்டர்நெட் விழிப்புணர்வு பேருந்து பயணம்


நமது தமிழ்நாட்டில் , இன்டர்நெட் -யை பற்றிய விழிப்புணர்வு பேருந்து பயணத்தை , அந்த நிறுவனம் இன்று துவக்கி உள்ளது . இப்பயணம் Feb 3 தொடங்கி Mar 13 வரை நடைபெற உள்ளது.

நமது மாநிலத்தில் உள்ள வெவ்வேறு நகரங்களுக்கு சென்று , இன்டர்நெட் -யை பற்றிய செயல் விளக்கங்களை கொடுக்க உள்ளது . உங்களது நண்பர்கள் அந்த ஊர்கலில் இருந்தால் , இதனை பயன்படுத்தி கொள்ள சொல்லுங்கள் . மேலும் இந்த செய்தியை ,
இன்டர்நெட் -யை பற்றி அறிய விரும்பும் மக்களுக்கு அடைய செய்யுங்கள்.

அந்த பயணத்தின் அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்.

பித்தன்