June 30, 2011

வாழ்க நம் காதல் பல்லாண்டு !!

கண்ணே , என் கனியமுதே ,
ஏன் இந்த மனதிற்கு இன்னும் புரியவில்லை ....
நீயென்றால் , நானென்று ,
தன் வாலை தேடும் நாய் குட்டி போல ..
தன்னை தானே தேடி அலைகிறது ....

பார்க்கும் இடமெல்லாம் நீ ...

இருந்தும் உனை பார்க்க துடிக்கிறது ..

தொலை தூரத்தில் நீ ...

இருந்தும் தொட்டணைக்க துடிக்கிறது ...

கடல் முழுதும் நீர் இருந்தாலும் ...

கடல் நடுவே , அதன் நீரால் தாகம் தணியாது ....
மனம் முழுதும் நீ இருந்தும் ..
உன் நினைவால் ஏங்குகிறது ...

ஆக்க பொறுத்த மனம் ....

ஆற பொறுக்க மறுக்கிறது ...
காலம் கனியும் வரை காத்திருக்க மறுக்கிறது ..

ஏன் இந்த மனதிற்கு இன்னும் புரியவில்லை ....

கட்டியணைப்பது மட்டும் காதல் இல்லை ....
உனக்காக காத்திருப்பதும் காதல் தான் என்று ...

என் மனதுக்கு எடுத்துரைபாய்
கண்ணே ..
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் , ஓருயிர் நாமென்று ....
காதல் செழிக்க , வெறும் கனவுகள் மட்டும் போதாதென்று ...
கடமையை மறந்த காதல் கரை சேராதென்று ...

காலம் வரும் வரை கடமையை செய்திருப்போம் ...

மனங்கள் ஒன்றினைந்த பின் , காதல் பறைசாற்ற
கரங்கள் ஒன்றிணைய காத்திருக்க தேவையில்லை ..
கடமை நன்றாட்டி காதல் பறைசாற்றிருப்போம் ....

வாழ்க நம் காதல் பல்லாண்டு !!


-பித்தன்

May 15, 2010

காலம் முழுதும் உன் காதல் போதும் !!

காதல் சொல்லும் உன் கண்கள் போதும் ,
என் காலம் முழுதும் கவிதை பாட ..

நேசம் வீசும் உன் பார்வை போதும் ,
என் நெஞ்சம் முழுதும் பூஞ்சோலை ஆக ..

வாசம் வீசும் உன் சுவாசம் போதும் ,
என் வாசல் வந்து வசந்தம் வீச ...

காலம் முழுதும் உன் காதல் போதும்,

என் வாழ்க்கை
முழுதும் வண்ணங்களாக்க ..

-பித்தன்

March 28, 2010

இன்னும் என்ன செய்ய போகிறாய் ?


மேகம் விரும்பா மழையாய் நான் இருந்தேன் ...
என்னில் ஒளியாய் நீ படர்ந்தாய் ...
எண்ணற்ற வண்ணங்களாய் மாறினேன் நான் .

துளைத் தின்ற கோலாய் நான் இருந்தேன் ...
என்னை தென்றலாய் நீ தழுவினாய்...
வருடும் மெல்லிசையாய் மாறினேன் நான் .

கரை வெறுக்கும் அலையாய் நான் இருந்தேன் ...
எனை விரும்பும் நிலவாய் நீ வந்தாய் ...
ஆனந்த பேரலையாய் மாறினேன் நான் .

-பித்தன்









February 15, 2010

காதல் துறவி

உயிரின் மேலுள்ள ஆசையினால்
உன் கண்களைப் பார்பதில்லை நான் ...

தமிழ்க் கவிதைகளின்
மேலுள்ள ஆசையினால்
உன் பெயரைச் சொல்வதில்லை நான் ...

மலர்களின்
மேலுள்ளஆசையினால்
உன் முகத்தினை
ப் பார்பதில்லை நான் ...

என் மனதின்
மேலுள்ள ஆசையினால்
உன் சிரிப்பினை
ப் பார்பதில்லை நான் ...

என் நினைவுகளின்
மேலுள்ள ஆசையினால்
உன் நிழலைக் கூட தொடுவதில்லை நான்
...

என் உறக்கத்தின்
மேலுள்ள ஆசையினால்
உன்னை நினைப்பதில்லை நான்
...

உலகின்
மேலுள்ள ஆசையினால்
உன்னைப் பார்பதில்லை நான் ...

துறவியாக அனைத்தையும் துறக்க வேண்டுமாம் ,
அவர்களுக்கு தெரியவில்லை உன்னை
க் காதலித்தால் போதுமென்று !!!

-பித்தன்

February 14, 2010

என் மனம்

பொம்மை கடையுள் சிக்கிய குழந்தையாய்
என் மனம் ..
எதை எடுப்பது , எதை விடுப்பது ,
குழந்தையாய் நான் , நினைவுகளாய் நீ !!!!

பவுர்ணமி திங்களின் கடல் அலையாய்
என் மனம் ..
தொடவும் முடியவில்லை , விடவும் முடியவில்லை ,
அலையாய் நான் , நிலவாய் நீ !!!

மின்னலை முதலில் காணும் கண்களாய்
என் மனம் ..
பாதி கண்கள் மூடினாலும் , மீதி கண்கள் மின்னலை தேடும் ..
கண்களாய்
நான் , மின்னலாய் நீ !!!

-பித்தன்

November 2, 2009

விழி வழியே , விழி வழியே , உயிர் வழிய கண்டேனே !!

விழி வழியே , விழி வழியே , உயிர் வழியக் கண்டேனே ..
என் முன்னே , என் முன்னே , என் மனதைக் கண்டேனே ..

விழி வழியே என் உயிர் வழிந்தாலும்
என் மனமும் நிறைவது எப்படி ??
குறைய குறைய நிறையும் உயிரை
உன் நினைவும் கொடுப்பது எப்படி ??

விழி வழியே . விழி வழியே மனம் கசியக் கண்டேனே ,,
கண் முன்னே , கண் முன்னே , என் கனவைக் கண்டேனே .,

உன்னை பற்றி நினைப்பது எல்லாம்
இந்த நிலவுக்கும் எப்படி தெரியும் ???
அந்த நினைவுகள் மனதில் மறையும் முன்னே ,
அவை நிலவில் படமாய் தெரியும் ..

விழி வழியே , விழி வழியே ஓர் கவிதைக் கண்டேனே ..
மனம் முழுதும் ,மனம் முழுதும் அதன் பெயரை கொண்டேனே ..

நீயும் நானும் பேசுவது எல்லாம் ,
கடல் அலைக்கும் எப்படி தெரியும் ??
தனிமையில் நானும் நடக்கையில்
அவைகளும் உன் போல் என்னிடம் பேசும் ..

விழி வழியே , விழி வழியே , உயிர் வழியக் கண்டேனே ..
என் முன்னே , என் முன்னே , என் மனதைக் கண்டேனே ..

- பித்தன்

அயன் பட பாடல் " விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் .." கேட்கும் பொழுது தோன்றியது :)

September 3, 2009

எதில் இன்பம் ??

தேடும் பொழுது கிடைப்பதில்லை ,
கிடைக்கும் பொழுது தேவையில்லை
கிடைக்காத ஒன்றை தேடுவதில் இன்பமா ??
இல்லை தேடுவது கிடைப்பதில் இன்பமா ??

இருக்கும் பொழுது விருப்பம் இல்லை,
விரும்பும் பொழுது இருக்கவில்லை
இல்லாத ஒன்றில் மேல் இருக்கும் விருப்பம் தான் இன்பமா ??

அருகில் இருந்தால்
அணைக்கமட்டோம்,
தொலைவில் இருந்தால் மறக்க மாட்டோம் ,
அனைப்பதை விட தொலைவில் இருந்து நினைப்பது தான் இன்பமா ??


- பித்தன்