June 13, 2009

நினைவலைகள்

தேதி : பத்து வருடங்களுக்கு முன் ஒரு நாள்

இடம் : எனது வீடு

காலை 4.30 :

"பிரசன்னா , எந்திரி அலாரம் அடிக்குது பார் , ஆப் பண்ணு "

"அம்மா , ஒரு 5 நிமிஷம் கழிச்சி எழுப்பி விடுங்க அம்மா , ப்ளீஸ் "

"டேய் இப்போ எந்திரிக்க , போறியா இல்லையா , படிக்க வேண்டாமா ?? , நல்ல தூங்கின மட்டும் போதுமா ?? , எந்திரிச்சு போய் பால் வாங்கிட்டு வா , காப்பி போட்டு தரேன் "

காலை 5.30 :

அம்மா வாசல் தெளிச்சு , கோலம் போட்டுட்டு வந்த பின் ,

"டேய் , என்ன book கையில வச்சு கிட்டு தூங்கற ?? "

" இல்ல மா , இப்போ தான் lighta , படிக்கிறேன் மா "

காலை 6.30 :

டிரிங் டிரிங் ( போன் அடிக்குது )

" பிரசன்னா , யாருன்னு கேளு "

" ஹலோ , யாரு பேசுறது அண்ணே ? "

" அம்மா , ஷக்தி லாரி செட்டு அம்மா , அய்யாவ கேக்குறாங்க "

" லாரி செட்டா , லோடு இருந்த கூபிடரனு சொல்லு "

" லெட்சுமி , வடுவகுடி லேந்து போன் வந்துச்சா ?? லோடு எத்தியசாம ?? " - இது அப்பா

"நைட் 3.30 மணிக்கு போன் பண்ணாங்க 50 மூட்டை குறையுதுன்னு சொன்னாங்க "

"மதுரை வண்டிக்கு பில்லு போட்டாச்சா " - அப்பா

"நைட்டு 1.30 மணிக்கு போட்டு அனுபியாச்சு "

காலை 7.30 :

" டேய் என்ன இன்னும் நெளிச்சு கிட்டு இருக்க , போய் uniform போடு " - அம்மா

" அம்மா என்னோட பனியன் எங்கமா ? " - இது நான்

" அம்மா என்னோட தமிழ் புக் எங்கமா ? " - இது கோபி

"லட்சுமி , துண்டு கொடு " - இது அப்பா

" இந்தாங்க துண்டு , பிரசன்னா இந்தா பனியன் , எல்லாம் உனக்கு கையல கொடுக்கும் , அவன் book தேடி கொடு "

காலை 8.00 :

" அம்மா , இன்னைக்கு என்ன சாப்பாடு ? " - கோபி

" இட்லி , குருமா டா "

" என்ன மா டெய்லி இட்லி " - கோபி

"டேய் டிவி பாக்காம சீக்கரம் சாபிட்டு விடு , கடைக்கு போகணும் " - அம்மா ..

====================================================================================
இது வரை நான் பார்த்ததில் , எங்க அம்மாவை போல ஒரு கடின உழைப்பாளியை நான் பார்த்து இல்லை. எனது அப்பா ஒரு சிறு நெல் வியாபாரி . அம்மாவும் அப்பாவுக்கு வியாபாரத்தில் ஒத்தாசையா இருப்பாங்க. இருவரும் எப்போ தூங்குவாங்க , எப்போ எந்திரிபாங்க என்று எனக்கு தெரியவே தெரியாது . ஆனால் நானும் தம்பியும் அதை உணர்ந்ததே இல்லை , எங்களுக்கு வேண்டியது சரியான நேரத்தில் வந்து கொண்டு இருக்கும் . எப்படி சமளிசாங்கனு இப்ப நினைச்ச ரொம்ப மலைப்பா இருக்கு

அவர்களிடம இருந்து நான் பெற விரும்பும் பண்புகளில் ஒன்று , சுய நலம் பாராமல் உழைப்பது .

பி.கு :
லெட்சுமி - அம்மா
கோபி - தம்பி
வடுவகுடி - பக்கத்து ஊர்
லோடு - நெல் லோடு