March 11, 2009

கென்னிய நாட்டவரால் பாட பெற்ற நமது ஜன கன மன

நமது நாட்டு தேசிய கீதம் கென்னிய நாட்டவரால் பாட பெற்றால் எப்படி இருக்கும் ??.





பெரும் முயற்சி எடுத்து பாடிய கென்னிய சகோதர , சகோதரிகளுக்கு எப்படி நன்றிசொல்லுவது ?? . இந்த பட தொகுப்பை பார்த்த பின் , எனது கண்கள் நிறைந்தன என்னை அறியாமல்.

March 4, 2009

உன்னை காணும் வரை

கவிதை எழுதுவது கடினம் என்றிருந்தேன்
உன் பெயரை எழுதும் வரை ...

குயில்களுக்கு அழகில்லை என்றிருந்தேன்
உன் குரலை கேட்கும் வரை ...

மின்னல்கள் கார் காலத்தில் மட்டும் தான் என்றிருந்தேன்
உன் கண்களை காணும் வரை ...

தனிமையை வெறுத்திருந்தேன்
உன் நினைவு வரும் வரை ...

வெற்றிகளே வாழ்வின் இன்பம் என்றிருந்தேன்
உன்னிடம் தோற்கும் வரை ...

தென்றலுக்கு உருவம்மில்லை என்றிருந்தேன்
உன்னை காணும் வரை ...


- பித்தன்
கவிதை எழுதுவது கடினம் என்றுருந்தேன்
உன் பெயரை எழுதும் வரை ...

குயில்களுக்கு அழகில்லை என்றுருந்தேன்
உன் குரலை கேட்கும் வரை ...

தனிமையை வெறுத்துருந்தேன்
உன் நினைவு வரும் வரை ...

மின்னல்கள் கார் காலத்தில் மட்டும் தான் என்றுருந்தேன்
உன் கண்களை காணும் வரை ...

வெற்றிகளே வாழ்வின் இன்பம் என்றுருந்தேன்
உன்னிடம் தோற்கும் வரை ...

தென்றலுக்கு உருவமில்லை என்றுருந்தேன்
உன்னை காணும் வரை ...

எங்கள் உறவுகளை அழிக்கலாம்

எங்கள் உறவுகளை அழிக்கலாம் ,
உணர்வுகளை என்ன செய்வீர்கள்
??

எங்கள் உரிமைகளை நசுக்கலாம் ,
உண்மைகளை என்ன
செய்வீர்கள் ??

எங்கள் மக்களை சிறை வைக்கலாம் ,
மனதினை என்ன
செய்வீர்கள் ??

தோழா !
நாங்கள் கற்பூர தீபம் அல்ல ..
ஊதினால் அணைவதற்கு
நாங்கள் காட்டு தீ ..
ஊத ஊத கொழுந்து விட்டு வளர்வோம் ..
ஏன் என்றால் நாங்கள் புதைக்கபடுவதில்லை
விதைக்க படுகிறோம் !!


- பித்தன்